நீட் தேர்வுக்கு ஆயத்தமாகி வந்த மாணவன் தற்கொலை..! அரியலூரில் அதிர்ச்சி சம்பவம்

9 September 2020, 1:25 pm
student suicide - updatenews360
Quick Share

அரியலூர் : நீட் தேர்வுக்காக தயாராகி வந்த மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலால் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீட், ஜேஇஇ உள்ளிட்ட தகுதித் தேர்வுகள் கட்டாயம் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என்பதால் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில், அரியலூர் மாவட்டம் எலந்தங்குழியை சேர்ந்த மாணவன் விக்னேஷும் நீட் தேர்வுக்காக தன்னை தயார்படுத்தி வந்தார்.

இந்த நிலையில், மிகுந்த மன உளைச்சலுடன் காணப்பட்டு வந்த அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் வரும் ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், மாணவனின் இந்த விபரீத முடிவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Views: - 8

0

0