கோவையில் 7 மையங்களில் நாளை ‘நீட்’ தேர்வு : 6 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்..!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2021, 8:40 pm
Cbe Neet Exam- Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் நீட் தேர்வினை 7 மையங்களில் 6,057 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.மருத்துவ படிப்பில் சேர நடப்பாண்டிற்கான நீட் தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 7 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.

அதன்படி, குரும்பப்பாளையம் பகுதியில் உள்ள ஆதித்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 960 பேர், சூலூர் ரத்தினவேலு சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியில் (ஆர்.வி.எஸ் கல்லூரி) 960 பேர், ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரி 960 பேர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் 960 பேர், ஸ்ரீ சரஸ்வதி வித்ய மந்திர் பள்ளியில் 417 பேர், கற்பகம் அகாடமி ஆப் ைஹயர் எஜூகேசன் 960 பேர், நேஷனல் மாடல் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 840 பேர் என மொத்தம் 6 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்.

கடந்த ஆண்டை போலவே தேர்வர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக நேற்று மேற்குறிப்பிட்ட தேர்வு மையங்களில் கிருமிநாசினி மற்றும் சமூக இடைவேளைக்கான வட்டம் வரையும் பணி நடைபெற்றது.

நாளை தேர்வு எழுதவரும் மாணவர்கள் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், மாஸ்க் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 195

0

0