வேகமாக சென்ற லாரி… கணவன் கண்முன்னே உடல்நசுங்கி பலியான மனைவி : பதைபதைக்க வைக்கும் காட்சி!!

7 November 2020, 3:52 pm
nellai accident - - updatenews360
Quick Share

நெல்லை : நெல்லையில் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி உரசியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதி கீழே விழுந்ததில், மனைவி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்நத்தத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். கோவில் பூசாரியாக இருக்கும் இவரும், இவரது மனைவி சாந்தியும் இருசக்கர வாகனத்தில் நெல்லையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீபுரம் அருகே சென்ற போது, அரிசி லோடு ஏற்றிக் கொண்ட லாரி, அவர்களது வாகனத்தை கடக்க முயன்றது.

அப்போது, பாலசுப்ரமணியத்தின் இருசக்கர வாகனத்தை உரசியபடி, லாரி சீறிப் பாய்ந்தது. அப்போது, நிலை தடுமாறியதாலும், மழையின் காரணமாக சாலை ஈரமாக இருந்ததாலும், அவர்களின் இருசக்கர வாகனம் சரிந்து விழுந்தது. இதில், பாலசுப்ரமணியத்தின் மனைவி சாந்தி, தனது கணவன் கண்முன்னே, லாரியின சக்கரத்தில் உடல் நசுங்கிய உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக பாலசுப்ரமணியம் லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.


இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியதால், அந்தக் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் பரவி பதைபதைக்க வைத்துள்ளது.

Views: - 27

0

0