திமுக எம்.பி.க்கு கொரோனா! மனைவியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி!!

28 August 2020, 1:48 pm
DMK MP Corna- Updatenews360
Quick Share

கொரோனா நோய் தொற்றுக்கு அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு திமுக எம்எம்ஏவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனவின் பாதிப்பு தமிழகத்தில் படுவேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பொதுமக்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், தொற்றை தடுக்க போராடி வரும் அரசு அலுவலர்கள், அமைச்சர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி வருகிறது.

குறிப்பாக தமிழக அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள் அதிகளவு பாதிப்படைந்து வருகின்றனர். இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் உயிரிழந்து விட்டார். அவரைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏக்களில் 15க்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில், திருநெல்வேலி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திமுக எம்எல்ஏக்களை தொடர்ந்து எம்பிகளுக்கும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

Views: - 10

0

0