சாலையில் ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்து… திடீரென கழன்று ஓடிய சக்கரம் ; அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய பயணிகள்..!!

Author: Babu Lakshmanan
15 March 2023, 9:19 am

நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

அரசு பேருந்து ராமையன்பட்டி முன்பு காவலர் குடியிருப்பு அருகே வரும்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராத விதமாக, சாலையில் கழண்டு ஓடியது. இதனையறிந்த பேருந்து ஓட்டுநர் திறமையாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகளும் காயம் இன்றி உயிர் தப்பினர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?