தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த புதிய விருது : ரூ.10 லட்சத்திற்கான காசோலையுடன் ‘தகைசால் தமிழர் விருது‘ அறவிப்பு!!

Author: Udayachandran
27 July 2021, 11:33 am
TN Sec -Updatenews360
Quick Share

சென்னை : தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது முதலமைச்சர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த “தகைசால் தமிழர்” விருது என்ற புதிய விருது வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

வரும் சுதந்திர தினத்தன்று தகுதியுடையவர்களுக்கு விருதுடன் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் வழங்குவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான். “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் “தகைசால் தமிழர்” விருது பெறும் விருதாளருக்கு பத்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திர தின விழாவின்போது, முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 128

0

0