தமிழக இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் : அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 July 2021, 11:45 am
Senji Masthon -Updatenews360
Quick Share

மதுரை : தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசிய முக்கியம்சங்கள் பின்வருமாறு,

  • தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகளுக்காக புதிய வீடுகள் கட்டி தரப்படும்
  • 2 மாதங்களில் வெளிநாடுகளில் 32 தமிழர்கள் இறந்து உள்ளனர்
  • 32 பேரில் 30 பேரின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளது
  • தமிழகத்தில் 13,553 இலங்கை அகதிகள் குடும்பங்கள் அகதி முகாமுக்கு வெளியே வசித்து வருகிறது
  • தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது
  • தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு சட்ட ரீதியாக இந்திய குடியுரிமை பெற்று தர தமிழக அரசின் சார்பில் சிறப்பு குழு அமைக்கப்படும்

இவ்வாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

Views: - 233

0

0