2வது படத்திலேயே ஜாக்பாட்: நயன்தாரா தயாரிப்பில் ஹீரோவாகிறார் ‘கவின்’..!!

Author: Aarthi Sivakumar
5 October 2021, 5:43 pm
Quick Share

சென்னை: விக்னேஷ் சிவன், நயன்தாரா தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கவின் நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

படங்கள் இயக்குவது மட்டுமன்றி, நயன்தாராவுடன் இணைந்து படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான ‘நெற்றிக்கண்’ இவருடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்ததுதான். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ‘கூழாங்கல்’, ‘ராக்கி’ உள்ளிட்ட படங்களின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றியுள்ளார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, அடுத்து படங்களைத் தயாரிக்கவும் கதைகள் கேட்டு வந்தார். இந்நிலையில், தற்போது கவின் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இதனைப் புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம், லலித்குமாருடன் இணைந்து தயாரித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 758

1

0