தொழில் துறையினரின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய புதிய செயலி : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 October 2021, 5:21 pm
Minister Senthibalaji - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்ட தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றை சாரல முறையில் புதிய செயலியை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அமைச்சர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நியமித்தார். அதன்படி கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று கோவை வந்த அமைச்சர் செந்தில்பாலாஜி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடனான ஆலோசனைக் மேற்கொண்டார்.

அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது : கோவையில் உள்ள 12 ஊராட்சிகளில் 1200 கிராமங்கள் உள்ளன, 332 கிராமங்களில் 3 நாட்களுக்குள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் மீதம் உள்ள கிராமங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை மாநகராட்சியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் அது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 ஆயிரம் தெரு விளக்குகள் தற்போது எரியாமல் உள்ளது, வரும் ஒரு வாரத்திற்குள் ஊரக பகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் சரி செய்யப்படும்.

அதே போல் கோவை மாவட்டத்தின் தொழில்துறை மற்றும் வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
மேலும் தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றை சாரல முறையில் அனுமதியளிக்க புதிய செயலியை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதனை தமிழக முதல்வர் அறிமுகம் செய்து வைப்பார்.

மக்கள் சபை நிகழ்ச்சிகள் மூலம் நான் உட்பட உயர் அதிகாரிகள் வார்டு வாரிய நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற உள்ளோம்.

இந்த மனுக்களை பெற்ற 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். கனிமவள கொள்ளையை தடுக்க முழுமையான விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 213

0

0