புதிய கட்டுப்பாடுகள் அமல் : முடங்கியது மேட்டுப்பாளையம்!!

7 May 2021, 7:47 pm
Mtp Curfew - Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையத்தில் பகல் 12 மணி முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் மேட்டுப்பாளையம் நகரமே முடங்கியது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மேலும், ஞாயிறு அன்று முழு அடைப்பும் அமலாக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், நோய் தொற்றின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு மே 6ம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக அறிவித்தது.

அதன்படி, காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மளிகை, பால், போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்படும் என்றும், உணவகம் மற்றும் மருந்து கடைகள் இரவு 9 மணி வரையும் செயல்படும் என்றும் அறிவித்தது.

இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையத்தில் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. 12 மணியுடன் பேருந்து நிலையம் வணிக வளாக கடைகள் அண்ணா காய்கறி மார்க்கெட் உழைப்பாளர்கள் சிறு வியாபாரிகள் மார்க்கெட், உட்பட மேட்டுப்பாளையத்தில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு விட்டது.

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் பார்சல் சேவைகள் மட்டும் வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி கடைகள், பாத்திரக் கடைகள், எலக்ட்ரானிக் கடைகள் உள்ளிட்டவை அனைத்தும் மூடப்பட்டுள்ளது, அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டுள்ளதா என்று மேட்டுப்பாளையம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், தலைமையில் நகராட்சி,அலுவலர்கள், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டும் வருகிறார்கள் அரசின் உத்தரவை மீறி வெளியில் செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்ய இருப்பதாக காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டது தெரியவந்தால் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் கூறினார்கள், புதிய கட்டுப்பாடு அமலானதால் மேட்டுப்பாளையம் முழுவதும் பொது முடக்கம் போல் காட்சியளிக்கிறது.

பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளது அதில் செல்வதற்கு உள்ளூர் வெளியூர் பயணிகள் குறைவாக உள்ளதால் பேருந்துகளும் குறைவான பயணிகளுடன் சென்று வருகிறது

Views: - 91

0

0