பொதுமக்களும், நாங்களும் ஒண்ணா? கைதிகளை சந்திக்க புதிய கட்டுப்பாடு : போலீசாருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதம்.. மறியலால் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
2 December 2022, 7:56 pm
Advocates Protest -Updatenews360
Quick Share

கோவை மத்திய சிறையில் இன்டர்கிராம் தொலைபேசி வசதி- கிரிமினல் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்

கோவை மத்தியச் சிறைச்சாலையில் கைதிகளின் உறவினர்கள் சிறை கம்பிகளுக்கு இடையில் இரண்டு மீட்டர் தூரத்தில் நின்று பேசி வந்த நிலையில், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் நேராக சென்று பேசி வந்தனர். இந்நிலையில் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி சண்முகசுந்தரம் உத்தரவுப்படி இன்டர்காம் தொலைபேசி மூலம் கைதிகளும், உறவினர்களும் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 8 இன்டர்காம் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிறைக்கைதிகளை, வழக்கறிஞர்கள் நேராக பார்க்க அனுமதிக்காமல், பொதுமக்களை போல இன்டர்காம் தொலைபேசி மூலம் பேச ஜெயிலர் உத்திரவிட்டுள்ளதை கண்டித்து, கிரிமினல் பார் அசோசியேசன் வழக்கறிஞர்கள், 30 க்கும் மேற்பட்டோர் ஏடிடி காலனி அருகேயுள்ள பார்க்கேட் சாலையில், அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டுமென கூறி வருவதால் வழக்கறிஞர் இடையேயும் போலிசார் இடையேயும் கடும் வாக்குவாதம் நிலவி வந்தது.

மேற்கொண்டு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கலையரசன் தெரிவிக்கையில் சிறைத்துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளோம் தங்களின் கோரிக்கைகளை விவாதித்து பரீசலனை செய்து மீண்டும் பழைய நடை முறைப்படியே சிறை கைதிகளிடம் சந்திக்க நேரம் ஒதுக்க படுவதாக மாவட்ட சிறை ஆய்வாளர் கூறியுள்ளார் என பேட்டியில் தெரிவித்தார்.

Views: - 174

0

0