நீலகிரியில் தொடர் கனமழை எதிரொலி: சாலையோரங்களில் உருவாகியுள்ள புதிய நீர்வீழ்ச்சிகள்…!!

Author: Aarthi Sivakumar
26 July 2021, 11:20 am
Quick Share

நீலகிரி: நீலகிரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலையோரங்களில் புதிய நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அவ்வப்போது ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.

இந்நிலையில் பந்தலூர், ஓவேலி, உதகை உள்ளிட்ட சாலையோரங்களில் புதிய நீர்வீழ்ச்சி உருவாகி பார்ப்பதற்கு அழகாகக் காட்சியளிக்கின்றன. கனமழை காலங்களில் மட்டுமே இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்க முடியும்.

வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வழியாக செல்பவர்கள் புதிய நீர்வீழ்ச்சிகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.

Views: - 162

0

0