பெண்களுடன் உல்லாசமாக இருந்த முகநூல் ரோமியோ காசி வழக்கில் புதிய திருப்பம்! பரபரப்பு தகவல்!!

21 November 2020, 11:49 am
Kasi Case- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : முகநூல் ரோமியோ நாகர்கோயில் காசி மீதான வழக்குகளில் உள்ள தடயங்களை அழித்ததால் அவரது தந்தை தங்க பாண்டியன் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து குற்றவாளியாக சேர்த்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவிகள். இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் போன்றோரை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு நட்பாக பழகி காதலிப்பது போல் நடித்து அவர்களோடு தனியறையில் உல்லாசம் அனுபவித்ததை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோக்கள் மற்றும் படங்கள் எடுத்து அவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர் மீது புகார்கள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து காசி கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார். கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞர் அளித்த புகார் மற்றும் இதுவரை காசியால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் அளித்த புகார்கள் என மொத்தம் ஏழு புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிபிசிஐடி போலீசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு காசி, சிபிசிஐடி போலீசார் காவலில் எடுக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

காசி தந்தை தங்கபாண்டியன்

அப்போது நான்கு வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த ரகசிய வீடியோக்களை காசியின் தந்தை தங்கபாண்டியன் அழித்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட 4 வழக்குகளிலும் காசியின் தந்தை தங்க பாண்டியனும் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, கந்துவட்டி தொடர்பான வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய ஆறு வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தங்கபாண்டியன் 4 வழக்குகளில் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0