ஆசை இணங்க மறுத்த மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை: விசாரணையில் அம்பலமான பல உண்மைகள்….

30 August 2020, 8:45 pm
Newly Marrieg Woman Murder - Updatenews360
Quick Share

திருச்சி: சமயபுரம் அருகே ஆசை இணங்க மறுத்த மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கோயா பைப் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் லால்குடியை கிருஷ்டி ஹெலன்ராணி என்பவருக்கும் கடந்த 10-07-2020 அன்று இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாளில் இருந்து கணவன் மனைவி இருவருக்கும் இடையே நல்ல புரிதல் இல்லையென கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை இயற்கை உபாதையினை கழிக்க வீட்டிலிருந்து அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாக சென்ற பெண் வீடு திரும்பவில்லை.

இதனால் அருள்ராஜ் அவரது உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றிற்கு சென்று பார்த்த போது, ஆற்றில் தேங்கியுள்ள குட்டை நீரின் கரையோரத்தில் உடலில் எவ்வித துணியுமின்றி சடலமாக கிடந்துள்ளார். அவர் அணிந்துயிருந்த நகைகள் மாயமாகி உள்ளது. தேடிச் சென்றவர்கள் சடலத்தை பார்த்து கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த சமயபுரம் கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் அருள்ராஜ் முன்னுக்கு பின்னாக பதில் அளித்துள்ளார். அதில் சந்தோகமடைந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கிருஷ்டி ஹெலன்ராணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதைதொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணமான நாளில் இருந்து ராணி தாம்பத்திய உறவிற்கு இணைங்க வில்லை என்றும், இது தொடர்பாக பலமுறை அருள்ராஜ் வலியுறுத்திய போதும் அவர் விரும்பவில்லை என்றும், இதனால் அடிக்கடி தாய்வீட்டிற்கு சென்று விட்டதாகவும்,

இதனால் கோபமடைந்த அருள்ராஜ் இன்று காலை இயற்கை உபாதைக்காக சென்ற ராணியை பின்தொடர்ந்து சென்று கழுத்தை நெரித்த கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக உடலில் துணிகள் இல்லாமலும், நகைகளை கழட்டிக்கொண்டு உடலை ஆற்றில் தூக்கி வீசியிருந்ததாகவும் தெரிவித்தார். ஆசை இணங்க மறுத்த மனைவியை கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0