மழையும் பெய்யும்…வறண்ட வானிலையும் நிலவும் ; இது தமிழகத்தின் காலநிலை..!

Author: Babu
2 October 2020, 5:08 pm
RAIN 1 - updatenews360
Quick Share

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த இரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும் எனக் கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் வெப்பநிலை நிலவும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

Views: - 51

0

0