காரைக்காலில் வணிக நிறுவன உரிமையாளர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..!!
Author: Rajesh12 பிப்ரவரி 2022, 4:52 மணி
புதுச்சேரி: காரைக்கால் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
காரைக்கால் ராவணன் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்துல் அமீன். இவர் காரைக்கால் பாரதியார் சாலையில் உணவகம் மற்றும் வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை காரைக்கால் வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள் ராவணன் நகரில் உள்ள அப்துல் அமீர் வீட்டில் நுழைந்து சோதனை மேற்கொண்டனர். பல மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில், செல்போன், கம்யூட்டர்கள் போன்ற பல ஆவணங்களை அதிகாரிகள் கைபற்றி சென்றதாக கூறப்படுகிறது.
சோதனையின் போது, காரைக்கால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். என்.ஐ.ஏ அதிகாரிகளின் திடீர் சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
0