கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலி… உதகையில் சுற்றுலாப் பயணிகள் எடுத்த வீடியோ வைரல்..!!

Author: Babu Lakshmanan
4 February 2023, 11:08 am

நீலகிரி ; உதகை அருகே தேயிலை தோட்டத்தில் கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உதகை அருகே வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை மற்றும் காட்டுமாடு உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவற்றில் புலி மற்றும் சிறுத்தைகள் அடிக்கடி சாலையோரங்களில் உலா வருவது வழக்கம்.

இந்நிலையில், உதகை அருகே சோலூர் கிராம பகுதிக்கு செல்லும் சாலையில், தேயிலை தோட்டத்தின் நடுவே சாலையை கடந்து தேயிலை தோட்டத்தில் கம்பீரமாக நின்று போஸ் கொடுத்த புலி, சிறிது நேரம் நின்று பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது.

இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களின் செல்போனில் எடுத்து வலை தளங்களில் பதிவிட்டது தற்போது வைரலாக பரவி வருகிறது.

  • cooku with comali seasonn 6 contestants list குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!