நிவர் புயல் எதிரொலி : சென்னையில் நாளை முதல் மறுஉத்தரவு வரும் வரை புறநகர் ரயில்சேவை ரத்து

24 November 2020, 7:20 pm
Indian_Railway_Local_Train_UpdateNews360
Quick Share

நிவர் புயல் காரணமாக சென்னையில் நாளை காலை முதல் மறுஉத்தரவு வரும் வரை புறநகர் ரயில்சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சரக்கு மற்றும் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. இருப்பினும், படிப்படியாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில், அக்டோபர் 7ந்தேதியில் இருந்து புறநகர் மின்சார ரெயில் சேவை வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர்களுக்காக மட்டுமே இந்த ரயில்சேவை வழங்கப்பட்டு வந்த நிலையில், தனியார் நிறுவன ஊழியர்களையும் ஏற்றிச் செல்ல இந்த மாத தொடக்கத்தில் அனுமதியளிக்கப்பட்டது.

இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், பாதிப்புள்ள மாவட்டங்களில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன. நாளை காலை 10 மணி வரை சூழலுக்கு ஏற்ப ரெயில் சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0