மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனி கூடுதல் கட்டுப்பாடுகள்: சென்னை மாநகராட்சி முடிவு

15 July 2021, 2:17 pm
Quick Share

சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை தீவிரமாக அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலில், “வார இறுதி நாட்களில் வணிக வளாகங்களில் கூட்டம் அதிகமாக உள்ளதாக புகார் வந்துள்ளது. அந்தவகையில் கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.காவல்துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்படும். அனைத்து இடங்களிலும் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற விதிமுறை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது அலையை தடுக்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Views: - 83

0

0