பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தா.பாண்டியன்..

1 November 2020, 2:41 pm
Tha Pandian - Updatenews360
Quick Share

புதுச்சேரி : தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி விடுதலை நாள் கருத்தரங்கம் தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், டெல்லி முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் வாங்காத கிரண்பேடியை புதுச்சேரி துணைநிலை ஆளுநராக மத்திய பாஜக அரசு நியமித்து இருப்பதாகவும் ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்க துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.

மேலும் ஆளுநரை வேற மாநிலத்திற்கு அல்லது டெல்லிக்கு மோடி அழைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கர்ணம் அடித்தாலும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்ற முடியாது என்றும் பாஜக எந்த அணி அமைத்தாலும் சரி, பாஜக ஆட்சியை விலை கொடுத்து வாங்கலாம் என்றாலும் அது பலிக்காது என்றார்.

மேலும் தமிழக மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் பாஜக வேல் யாத்திரை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் போகும் இடம் எல்லாம் வரவேற்பு இருக்காது என்றும் கருத்து தெரிவித்த அவர் அந்த அவமானத்தை அவர்கள் சந்திக்கட்டும் என்றும் விமர்சனம் செய்தார்.

Views: - 15

0

0