எஃகு கோட்டையான அதிமுகவை வீழ்த்த யாராலும் முடியாது : ஓபிஎஸ் பேச்சு!!

18 January 2021, 3:07 pm
Ops Speech- Updatenews360
Quick Share

சென்னை : ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக இயக்கத்தில் அண்ணன் தம்பி பிரச்சனைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்வோம் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் “அம்மா பேரவை“ சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எஃகு கோட்டையாக உள்ள ஒரே கட்சி அதிமுக என்றும், சாதாரண தொண்டர்கள் கூட பெருமைப்படும் இயக்கமாக அதிமுக உள்ளதாக கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டுகள் முதலமைச்சராக செயல்பட்டு, நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் செயல்பட்டால் யாராலும் அதிமுகவை வெல்ல முடியாது என கூறினார்.

அதிமுக இன்னும் பல ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும் என பேசிய அவர், அதிமுக மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், அதிமுக மீது எந்த கெட்ட பெயர் இல்லையென்றும், திமுக ஒரு தீய சக்தி அதை அகற்ற வேண்டும் என கூறினார்.

மேலும் பேசிய அவர், ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள மாபெரும் இயக்கமான அதிமுகவில் அண்ணன் தம்பி பிரச்சனைகள் இருந்தால் பேசி தீர்ப்போம் என்றும், சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி கைப்பற்றும், அதை நோக்கி தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கூறினார்.

Views: - 0

0

0