கோவை மாநகராட்சி சாலைகளில் வாகனம் நிறுத்தினால் கட்டணம்..! : எந்த பகுதிக்கு எவ்வளவு? – முழு விவரம்

Author: Babu Lakshmanan
15 January 2022, 10:05 pm
Quick Share

கோவை மாநகராட்சி சாலைகளில் வாகனம் நிறுத்தினால் கட்டணம்..! : எந்த பகுதிக்கு எவ்வளவு? – முழு விவரம்

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30 இடங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சாலையோரம் வாகனம் நிறுத்தினால் கட்டணம் வசூலிக்கும் முறை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் அமலில் இருந்தது. இந்த நிலையில் மக்களின் கடுமையான எதிர்ப்பால் கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது இந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சியின் வருவாய் குறைந்துள்ளதாக கூறி, நகரின் முக்கியமான 30 இடங்களில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது கோவை மாநகர மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே மாநகரின் எந்தெந்த பகுதிகளில் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தினால் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன் விவரத்தை கீழே காணலாம்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் தேர்வு செய்யப்படும் வாகன நிறுத்தும் இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் கட்டணமாக ரூபாய் 20 விதமும் மற்றும் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம் கட்டணமாக ரூபாய் 5 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதேபோல் மாத வாடகை கட்டணமாக நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 2400 வீதமும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 600 வீதம் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

Views: - 289

0

0