இந்த முறை காவி சாயம் இல்ல… அண்ணா சிலை மீது குங்கும சாயம் பூசி அவமதிப்பு : மறியலில் இறங்கிய திமுகவினர்..!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2024, 6:09 pm
Anna Statue
Quick Share

இந்த முறை காவி சாயம் இல்ல… அண்ணா சிலை மீது குங்கும சாயம் பூசி அவமதிப்பு : மறியலில் இறங்கிய திமுகவினர்..!

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகம் எதிர்ப்புறம் பேரறிஞர் அண்ணாவின் மார்பளவு சிலை நிறுவப்பட்டுள்ளது.

திமுக சார்பில் நிறுவப்பட்ட இந்த சிலையை மறைந்த பேராசிரியர் அன்பழகன் 1984 திறந்து வைத்தார். இந்த சிலைக்கு திமுகவினர் அவ்வப்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர் இந்த நிலையில் இன்று காலை அவ்வழியே வந்தவர்கள் அண்ணா சிலையில் நெற்றி பகுதியில் குங்குமப்பொட்டு வைத்து அந்த குங்குமத்தை அவரது சிலை மீது பூசி இருந்ததை பார்த்தனர் .

இந்த தகவலானது அப்பகுதியில் பரவியதை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது இது பற்றி தகவல் அறிந்த அப்பகுதி திமுக கவுன்சிலர் முருகானந்தம் வட்டச் செயலாளர் தமிழ் மற்றும் நிர்வாகிகள் சிலை முன்பு திரண்டனர்.

தொடர்ந்து அண்ணா சிலைக்கு குங்கும பொட்டு வைத்து சிலை மீது குங்குமத்தை பூசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் படிக்க: நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி.. மின்சார டவர் மீது ஏறி தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை மிரட்டல்!

இதற்கிடையே மாநகராட்சி அலுவலர்கள் மூலமாக சிலை மீது இருந்த மற்றும் குங்கும சாயத்தை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து மாலை அணிவித்து சிலைக்கு பூட்டு போடப்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அருகில் உள்ள கோவிலில் இருந்து குங்குமத்தை எடுத்து வந்து சிலை மீது பூசி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் பூசிய நபர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் மேலகல்கண்டார் கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Views: - 197

0

0