தமிழகத்தில் ஜிகா வைரஸ் காய்ச்சல்… அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?

16 July 2021, 9:27 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை அசோக் நகர் தனியார் பள்ளியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது போன்ற 13 கோரிக்கைகளை மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தியாக கூறினார். தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டமைப்பு வசதிகள் தயாராக உள்ளது என்று கூறிய அவர், தமிழகத்தில் யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்புகள் இல்லை என தெரிவித்தார். மேலும், அனைவரும் தவறாமல் தடுப்பூசி போடவேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டார்.

Views: - 68

0

0