ஹேய் ‘மாதர்***’ .. போதையில் போலீசாரை தாக்கி இந்தியில் திட்டி வடமாநில இளைஞர் அடாவடி : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 7:38 pm
Mentalli Ill Attack Police -Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் வடமாநில இளைஞர் ஒருவர் கடும் குடிபோதையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தாக்கி தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரியில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையின் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனைச்சாவடியில் இன்று மாலை கடும் குடிபோதையில் வந்த வடமாநில இளைஞர்கள் ஒருவர் சோதனைச்சாவடி வழியாக சென்று கொண்டிருந்த வாகனங்களை வழிமறித்து வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் படுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைக்கண்ட சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறையினர் சாலையில் படுத்து தகராறில் ஈடுபட்டிருந்த வடமாநில இளைஞனை அப்புறப்படுத்தி உள்ளனர். அப்போது கடும் குடிபோதையில் இருந்த அந்த வடமாநில இளைஞர் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரை தாக்க முற்பட்டதோடு சாலையில் செல்லும் வாகனங்கள் மீது கற்களை வீசுவது போல் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு வந்த மற்றொரு வடமாநில இளைஞர் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த இளைஞன் தன்னுடன் பண்ணாரி கோவிலுக்கு வந்ததாகவும் தாங்கள் இருவரும் திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியில் உள்ள நூற்பாலையில் பணியாற்றி வருவதாகவும் ரகளையில் ஈடுபட்ட நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் அந்த இளைஞனுடன் அனுப்பி வைத்தனர்.

கடும் குடிபோதையில் சுமார் ஒரு மணி நேரம் பண்ணாரி சோதனை சாவடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞரால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Views: - 478

0

0