விலகுகிறது வடகிழக்கு பருவமழை : பொங்கல் விடுமுறைக்கு பிறகு மழைக்கு வாய்ப்பில்லை..!!

16 January 2021, 2:31 pm
changes of rain - updatenews360
Quick Share

சென்னை : பொங்கல் பண்டிகைக்கு பிறகு வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குமரிக்கடல் மற்றும் தென்னிலங்கைப் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. எனவே, தென் கடலோர மாவட்டங்களிலும், தெற்கு உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 5 செ.மீ.,மழையும், ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் 4 செ.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
வரும் 19ம் தேதி முதல் தென் மாநிலங்களில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுகிறது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0