பணிக்கு வரும் போதெல்லாம் பாலியல் டார்ச்சர்.. செவிலியர் தற்கொலை முயற்சி : விசாரணையில் சிக்கிய மருத்துவர்.!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 2:04 pm

பணிக்கு வரும் போதெல்லாம் பாலியல் டார்ச்சர்.. செவிலியர் தற்கொலை முயற்சி: விசாரணையில் சிக்கிய மருத்துவர்.!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் (28).

இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் சரண்யா (31) என்ற செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனது விருப்பத்துக்கு இணங்கா விட்டால் பணியில் இருந்து விலக்கி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதனையடுத்து சரண்யா அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலக்குண்டு போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர்.

மேலும் படிக்க: நினைச்சா செஞ்சிருக்கலாம்.. CM மனசு வைக்கல : போராட்டத்துக்கு தயாரா இருங்க.. ராமதாஸ் முக்கிய அறிவிப்பு!

செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரசு மருத்துவர் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ