கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு : 33 ஏக்கர் நிலத்தை மீட்ட இந்து அறநிலையத்துறை!!

17 July 2021, 12:40 pm
Land Rescue - Updatenews360
Quick Share

திருப்பூர் : தாராபுரம் அருகே இரு கோயில்களுக்குச் சொந்த ரூ.2.88 கோடி மதிப்பிலான 33 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

தாராபுரம் வட்டம் ஏரகாம்பட்டி கிராமத்தில் அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை 3 தனி நபர்கள் ஆக்கிரமித்திருந்தனர்.

இதே கோயிலுக்குச் சொந்தமான ரூ.78 லட்சம் மதிப்புள்ல 12 ஏக்கர் 95 சென்ட் நிலத்தை 4 தனிநபர்கள் ஆக்கிரமித்து வைத்திருந்தனர். அதே போல, பொன்னாபுரம் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் 47 சென்ட் நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்திருந்தனர்.

இதுகுறித்து தமிழக இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் திருப்பூர் இணை ஆணையர் நா.நடராஜன் தலைமையில், உதவி ஆணையர் ரெ.சா.வெங்கடேஷ், தாராபுரம் சரக ஆய்வர் சண்முகசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்த 33 ஏக்கர் நிலத்தை மீட்டனர்.

இதன்மொத்த சந்தை மதிப்பு ரூ.288 கோடியாகும். மேலும், இந்த இடங்களில் கோயிலுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையும் அதிகாரிகள்வைத்தனர்.

Views: - 276

0

0