எங்கு திரும்பினாலும் ஆக்கிரமிப்பு : நெசவாளர் குடும்பத்தினருக்கு அளித்த வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பு.. ஆட்சியரிடம் புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 April 2022, 1:21 pm

கோவை : நெசவாளர் குடும்பத்தினருக்கு துடியலூர் பகுதியில் வழங்கப்பட்ட 72 வீட்டு மனைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்,

கோவை துடியலூர் பகுதியில் 1963 ஆம் ஆண்டு தனது பாட்டிக்கும் நெசவாளர்கள் குடும்பத்தினதுக்கும் கொடுத்த 72 வீட்டு மனைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும் அதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீவானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜீவானந்தம், “நெசவாளர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்ட 72 வீட்டு மனையை தற்போது புறம்போக்கு நிலம் என அறிவித்து அரசியல் குறுக்கீடு காரணமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும் தங்களது வாழ்வாதாரம் காக்க இந்த இடத்தை மீட்டுத் தருவது மிகவும் அவசியமானது.” என்றார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?