மதுபான கடைகளில் சலுகை… விளம்பரம் செய்ய தடை : கலால்துறை எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 July 2023, 1:56 pm

மதுபான கடைகளில் சலுகை… விளம்பரம் செய்ய தடை : கலால்துறை எச்சரிக்கை!!

புதுச்சேரியில் மதுபான விற்பனை உரிமம் பெற்ற உரிமையாளர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள். விடுதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் மதுபான விற்பனை சம்பந்தமான சலுகைகள் அதாவது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். பெண்களுக்கு மது இலவசம். மது வாங்கினால் பரிசு பொருள்கள் இலவசம் போன்றவற்றை குறித்த விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள் வைத்துள்ளதாக கலால் துறைக்கு தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, மதுபானம் விற்பனை சலுகைகள் சம்பந்தமான பதாகைகள், சுவரொட்டிகள், நாளேடுகளில் வெளியிடுதல், பரிசு பொருட்கள் வழங்குதல் அல்லது வேறு எந்த விதத்திலாவது விளம்பரம் செய்தல் புதுச்சேரி கலால் விதிகளின்படி தற்போது தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், மேற்கூறிய மதுபான விற்பனை உரிமை பெற்றவர்கள் தங்களது மதுபான கடைகள், உணவகங்கள். விடுதிகள், சமூக வலைதளங்களில் உள்ள விளம்பரங்களை உடனடியாக நீக்கவேண்டும் எனவும் கலால் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான விதி மீறல்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு புதுச்சேரி கலால் விதிகளின்படி தக்க நடவடிக்கை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!