இஸ்லாமிய அமைப்பு தலைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை : 3 மணி நேரத்திற்கு மேல் சோதனையால் மதுரையில் பரபரப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 February 2024, 12:12 pm

இஸ்லாமிய அமைப்பு தலைவர் வீட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை : 3 மணி நேரத்திற்கு மேல் சோதனையால் மதுரையில் பரபரப்பு!

மதுரை மாநகர் ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியில் வசித்துவரும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவரான அலிஜிகாத் (எ) முகம்மது அப்துல் அஜிம் என்பவரது வீட்டிற்கு NIA அதிகாரிகள் இன்று அதிகாலை 6 மணிக்கு விசாரணை நடத்துவதற்காக வருகை தந்தனர்.

NIA அதிகாரிகள் வருகை தந்த நிலையில் அவரது வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் காலை 7.30 மணிக்கு மேல் ஹாஜிமார்தெரு சாவடி எதிரேயுள்ள சந்தில் உள்ள ஜிகாத் அலி சகோதரரின் வீட்டில் இருந்த நிலையில் NIA அதிகாரிகள் சோதனையை தொடங்கிய நிலையில் 3 மணி நேரத்திற்கு மேலாக அலி ஜிகாத்டம் விசாரணை செய்துவருகின்றனர்.

இவரிடம் கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஏதேனும் தொடர்பு உள்ளதா ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

NIA அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில் திடீர்நகர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

NIA அதிகாரிகள் விசாரணை நடத்திவரும் அலிஜிகாத் (எ) முகம்மது அப்துல் அஜிம் என்பவரது மீது விளக்குத்தூண் காவல்நிலையத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபர் மசூதி தொடர்பாக சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!