என்னதான் நடக்கும் நடக்கட்டுமே…. ஆய்வுக்கூட்டத்தில் அதிர வைத்த ‘குறட்டை ஒலி’ : அமைச்சர்கள் முன்னிலையில் தூங்கி வழிந்த அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2022, 6:50 pm

தூத்துக்குடி : 3 அமைச்சர்கள் முன்னிலையில் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் தூங்கி வழிந்த அதிகாரிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்தினை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுப்பணித்துறை கட்டிட செயற்பொறியாளர் ரேவதி மற்றும் பின்வரிசையில் அமர்ந்திருந்த மற்றும்மொரு அதிகாரியும் 3 அமைச்சர்கள் முன்னிலையில் முன்வரிசையில் அமர்ந்து தூங்கிவழிந்தனர்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?