சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதி விபத்து… ஒருவர் உயிரிழப்பு…!

Author: kavin kumar
31 January 2022, 4:02 pm

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து சரக்கு வாகனம் மதுரையில் சரக்குகளை இறக்கி விட்டு அருப்புக்கோட்டை வழியாக மீண்டும் சாயல்குடி நோக்கி கொண்டிருந்தது சரக்கு வாகனத்தை சாயல்குடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் ஓட்டி வந்தார். அப்போது அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் இருந்து திரும்பி காந்திநகர் சர்வீஸ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த டாரஸ் லாரியின் எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் ஓட்டுநர் அருகே அமைந்திருந்த இளந்தடியான்(45) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஓட்டுனர் வேல்முருகன் மற்றும் சாந்தகுமார் ஆகிய இருவர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துமனை கொண்டு செயல்பட்டனர். மேலும் நவீன கருவிகள் மூலம் சரக்கு வாகனத்தில் சிக்கியிருந்த இளந்தடியான் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…