ஆன்லைன் விளையாட்டுக்கள் குழந்தைகளையும் சீரழிக்கிறது : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!!

15 September 2020, 5:06 pm
Madras_High_Court_UpdateNews360
Quick Share

சென்னை : ஆன்லைன் விளையாட்டுக்களால் குழந்தைகளும் சீரழிவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை நடத்தி வருபவர்களை கைது செய்யப்படுவதோடு, இந்த சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் விளையாட்டுக்கள் இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கில், கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க மறுப்பு தெரிவித்ததுடன், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

Views: - 6

0

0