Open the TASMAC…. மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க கோரி மதுப்பிரியர்கள் போராட்டம் : பெண்கள் கொடுத்த ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 October 2023, 5:04 pm

Open the TASMAC…. மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க கோரி மதுப்பிரியர்கள் போராட்டம் : பெண்கள் கொடுத்த ஷாக்!!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையினால் அப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறி கிராம பெண்கள் நேற்றைய தினம் டாஸ்மாக் கடை முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக இன்றைய தினம் டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மது பிரியர்கள் தங்கள் இருந்த டாஸ்மாக் கடையை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு மூடிவிட்டு ஊருக்கு வெளியே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும், இந்த கடை மூடினால் நீண்ட தூரம் சென்று மதுபான கடையில் மதுபானம் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு மதுபானம் வாங்க வேண்டி நிலை ஏற்படும் என்பதால் தங்கள் பகுதியில் மூடிய மதுபான கடையை திறக்க கோரி விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மதுபரியர்கள் மதுபான கடையை திறக்க கோரி மனு அளித்தனர்.

ஒரு புறம் மதுபானக்கடையை திறக்க கூடாதென பெண்கள் போராட்டத்தில் ஈடுபடவும் மறுபுறம் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டுமென மது பிரியர்கள் மனு அளிக்கும் சம்பவத்தால் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!