உள்இடஒதுக்கீட்டில் இடம் பிடித்த மாணவி : கனவு பலித்ததாக தமிழக அரசுக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி!!

4 November 2020, 6:18 pm
Neet Student- Updatenews360
Quick Share

தேனி : நீட் தேர்வில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த பள்ளி மாணவி, மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தும் பண வசதியில்லாமல் தவித்து வருகிறார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த சங்கரமூர்த்திபட்டியை சேர்ந்த அய்யணசுவாமி. மாட்டு வண்டி ஓட்டும் தொழிலாளியான இவருக்கு 19 வயதில் மூத்த மகள் உள்ளார்.

அனுஷா என்ற அந்த மாணவி 5 கீமீ நடந்து சென்று வைகை அணை அரசு மேல்நிலை பள்ளியில் படித்து. 12ம் வகுப்பு தேர்வில் 600க்கு 480 மதிப்பெண் பெற்று, மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வத்தால் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன் சென்னையில் உள்ள நீட் தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றார்.

இதன் பின் நடந்த நீட் தேர்வில் 720க்கு 397 மதிப்பெண் பெற்றார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மாநில அரசு வழங்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவி அனுஷாவுக்கு மாநில அளவில் மூன்றாம் இடம் கிடைத்தது.

இதையடுத்து மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைப்பது உறுதியான நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கல்விக்கு செலவிட முடியாத நிலையில் உள்ளார்.

இது குறித்து அனுஷா கூறுகையில், “அரசு வழங்கிய சிறப்பு ஒதுக்கீடு காரணமாக கிராமத்தில் படித்த எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். ஆனால் தற்போது மருத்துவக்கல்லூரியில் சீட் கிடைத்தும், கல்விக்கு செலவிட முடியாத நிலையில் பெற்றோர் உள்ளதாக படிப்புக்கான உதவியை எதிர்பார்த்துள்ளளேன்“ என தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவி அனுஷாவுக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் 63829 39571 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 21

0

0