தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு? நாளை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்!!

4 May 2021, 3:37 pm
TN Lockdown -Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கை அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வருவதால் பாதிப்பு எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்து வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ராம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாகவும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

What's In A Name? When 'Mr. Highcourt' Approaches Madras High Court

அமெரிக்க, பிரிட்டன் போன்ற நாடுகள் தடுப்பூசி மருந்துகளை இலவசமாக வழங்கி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு மருந்துகள் கட்டணம் வைத்து விறப்னை செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும், செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உற்பத்தி தொடங்க வேண்டும் என்றும், மாநிலத்தின் உள்ளே மற்றும் வெளியே போக்குவரத்து நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், தடுப்பூசிகளை இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்றம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 189

0

0

Leave a Reply