கடன் தவணை செலுத்த அவகாசம்: பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

12 May 2021, 10:23 pm
mks-updatenews360
Quick Share

சென்னை: தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் கோரி பிரதமர் மோடி மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனை முன்னிட்டு அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதன்படி, வருகிற 24ந்தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில் பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:- சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வங்கி கடன் வட்டியையும் வசூலிக்க கூடாது.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வங்கி கடன் தவணை செலுத்த 6 மாதம் அவகாசம் தேவை. தொழிலாளர்களுக்கான வைப்பு நிதியை 6 மாதம் பிடித்தம் செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Views: - 51

0

0