மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு : தமிழக விவசாயிகள் முற்றுகை!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2021, 7:29 pm
Farmers Protest -Updatenews360
Quick Share

ஈரோடு : மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட 9000 கோடி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளதாக முதலமைச்சர் எடியூரப்பா கடந்த வாரம் கர்நாடக சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இதை கண்டித்தும் அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் மத்திய அரசு கர்நாடகாவுக்கு துணை போவதை கண்டித்தும் காவிரி மேலாண்மை ஆணையம் உடன் தடுத்து நிறுத்த கோரியும் இந்திய தேர்தல் ஆணையம் உடனே இந்த பிரச்சினையில் தலையிட வலியுறுத்தியும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக மேகதாது அணை பகுதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சத்தியமங்கலத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி கண்டனங்களை பதிவு செய்தனர்.

Views: - 66

0

0