கட்சி நிர்வாகிகளுடன் ஈபிஎஸ்-ஓபிஎஸ் இன்று ஆலோசனை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது..!!

6 February 2021, 9:08 am
Quick Share

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். இதற்கிடையே சசிகலாவுக்கு ஆதரவாக அதிருப்தி அதிமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டிய சம்பவமும் நிகழ்ந்தது.

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலா வருகை, சட்டசபைத் தேர்தலுக்கான வியூகம், தேர்தல் கூட்டணி குறித்தும் ஆலோசிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 0

0

0