தமிழக மக்களே கவனம்…10 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட்: உங்க மாவட்ட நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க..!!

Author: Aarthi Sivakumar
19 October 2021, 12:46 pm
Quick Share

கோவை: தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல மாவட்டங்களில் மிக கன மழைக்கும், மேலும் பல மாவட்டங்களில் கன மழைக்கும் வாய்ப்புள்ளது.

அரபிக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு  ஆரஞ்சு அலர்ட்..!! – Update News 360 | Tamil News Online | Live News |  Breaking News ...

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, சேலம், மதுரை, திருச்சி, பெரம்பலுார், அரியலுார், கடலுார் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கன மழை பெய்யும்.

இதேபோல, 21ம் தேதி புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில், இடி, மின்னலுடன் மிக கன மழை பெய்யும். சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் நாளை மறுநாள் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 219

0

0