வடலூர் ராமலிங்கர் நினைவுநாள்: சென்னையில் 28ம் தேதி அனைத்து இறைச்சி கடைகளையும் மூட உத்தரவு…!!

23 January 2021, 8:59 am
Meat_UpdateNews360
Quick Share

சென்னை: வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளும் வருகிற 28ம்தேதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து இறைச்சி கடைகளும் வருகிற 28ம் தேதி வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இறைச்சி கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் வியாபாரிகள் யாரும் இறைச்சி விற்பனை செய்ய வேண்டாம். இதற்கு வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 17

0

0