பாதுகாப்பு காரணங்களுக்காக வெளிமாநிலங்களில் படப்பிடிப்பு – ட்விட்டரில் ஆர்.கே.செல்வமணி-க்கு அஜித் ரசிகர்கள் பதிலடி..!

Author: Rajesh
4 May 2022, 1:55 pm

நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை ஹைதராபாத் போன்ற வேறு மாநிலத்தில் நடத்துவதால், தமிழகத்தில் உள்ள திரைப்பட தொழிலாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நடிகர் அஜித் குமார் தனது படத்தின் படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்றும் சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் உள்ளது எனவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், ட்டுவிட்டரில், அஜித் படத்தின் படப்பிடிப்பு ஏன் தமிழகத்தில் நடைபெறுவதில்லை என்பது குறித்து பதிவுகளை அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவர் தான் அஜித், ஒரு மாஸ் நடிகரை வச்சு ரோட்டுல படப்பிடிப்பு நடத்தவே முடியாது, கும்பல் கூடும், அதுல ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தா, அஜித் படத்தின் படப்பிடிப்பின் போது விபத்துன்னு நீயூஸ் வரும். இது போன்ற சம்பவங்களை தவிர்ப்பதற்காக படக்குழு இது போன்ற முடிவுகளை எடுப்பதாக அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், வெளிமாநிலங்களில் அஜித் படத்தின் படப்பிடிப்பு நடந்தாலும் பெரும்பாலான தமிழ் துணை நடிகர்கள் தான் அஜித் பக்கத்தில் இருப்பார்கள் என்றும் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!