கணக்கு தெரியாம என்னத்த படிச்சாரு ப.சிதம்பரம்.. அரசியலில் இருக்க அருகதையே இல்ல : ஹெச் ராஜா ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 June 2024, 11:54 am

காஞ்சிபுரம் சங்கர மடம் வந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தார்மீக வெற்றி காங்கிரஸ் கட்சிக்குதான் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாரே என்று நிருபர்கள் கேட்டதற்கு? அவருக்கு பொருளாதாரம் தெரியாது என்றுதான் நினைத்தேன், கணக்கும் தெரியவில்லை. 3 டிஜிட்டை கூட காங்கிரஸ் கட்சியால் தொட முடியில்லை.

99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் என்ன தார்மீக வெற்றி இருக்கிறது. 240 பெரிதா, 99 பெரிதா என்பது கூட தெரியவில்லை என்றால் அவருக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரைத்தான் குறைசொல்ல வேண்டும்.

பாஜக போட்டியிட்ட இடங்கள் 440 மட்டுமே. மற்ற இடங்களில் கூட்டணிக் கட்சிகள்தான் போட்டியிட்டன. அவர்களும் சேர்ந்துதான் பெரும்பான்மை கிடைத்துள்ளது.

அதற்காக 99 தார்மீக வெற்றி என்பது வயது மூப்பின் காரணாக ஏற்பட்ட தடுமாற்றமாக தெரிகிறது என்றார்.

பாமகவால்தான் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்ததாக செல்வப்பெருந்தை கூறியது குறித்து கேட்டதற்கு செல்வப்பெருந்தகை வாயை மூடி இருப்பது நல்லது. டி.நகர் ஆடிட்டர் கொலை வழக்கு உள்பட பழைய வழக்குகள் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்ற கேள்விகள் இருக்கிறது.

மேலும் படிக்க: இதுதான் சரியான நேரம் : தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி… இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

அவர் எந்தெந்த கட்சிக்கு சென்று வந்தார் என்பது தெரியுமா? அதையெல்லாம் பேச வேண்டுமா?.என்றார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?