ஒரே ஒரு கோடு.. பிரபலமான பெயிண்டர் : கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..ஆனா உண்மை தெரிஞ்சா அசந்துடுவீங்க!!

13 July 2021, 4:22 pm
Memes Trending- Updatenews360
Quick Share

திண்டுக்கல் : சாலையில் வரையப்பட்ட கோடு கலாய்த்த மீம்ஸ் கிரியேட்டர்ஸ்… எதற்காக அநத் கோடு என்பது உள்ளிட்ட பல்வேறு உண்மைகள் வெளிவந்துள்ளன.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் யாருப்பா அந்த பெயிண்டர் என கூறி சாலையில் வரையப்பட்ட வளைவான கோடு படத்துடன் மீம்ஸ்கள் உலாவின. அப்படத்தைப் பார்த்து எந்த இடம் என பலரும் தேடி வந்த நிலையில் அந்த சாலை திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சி மணியக்காரன்பட்டியில் இருப்பது தெரியவந்தது.

சமூக வலைதளங்களில் இந்த ரோடு மற்றும் பெயிண்டர்,கான்ட்ராக்டர் குறித்தும் மீம்ஸ் உலா வந்த நிலையில் இந்த சாலை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு, சாலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கோடுகள் வரையப்பட்டுள்ளது.

அப்பொழுது சாலையில் ஓரத்திலிருந்து சாலை நடுவே 2 அடி முதல் 3 அடி உள்பக்கமாக 2 இடங்களில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான பைப் லைன் இணைப்பு உள்ள இடத்தில் கட்டப்பட்டு இருந்த காங்கிரீட் தொட்டியை இருந்துள்ளது. இதனால் பலர் வாகனங்களில் செல்லும்போது சிறுசிறு விபத்துகளில் சிக்கி உள்ளனர்.

இதையடுத்து சிலர் அந்தப் பள்ளம் தெரிவதற்காக தென்னம் ஓலைகளை அங்கு போட்டுள்ளனர். இதை சிலர் புகைப்படம் எடுத்து அந்த தென்னை ஓலைக்காக சாலையில் கோடு வளைவாக வரையப்பட்டதாக சமூகவலைதளங்களில் மீம்ஸ்களாக பரப்பி வந்துள்ளனர்.

சாலையின் ஓரத்தில் காவிரி குடிநீர் இணைப்பு இருப்பது தெரிந்தும், சாலையை மாற்றி அமைக்காமல் சாலை போட அனுமதி அளித்த அதிகாரிகளை சொல்வதா அல்லது ரோடு போட்ட காண்ட்ராக்டர், ரோட்டில் கோடு வரைந்த பெயிண்டரை குறை சொல்லுவதா? எதுவாக இருந்தாலும் விபத்துக்கள் நடக்கும் முன் சாலையில் உள்ள இந்தபள்ளத்தை சரி செய்யப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 331

0

0