பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் நிதி உதவி பெற லஞ்சம்: ஊராட்சி செயலாளர் கைது

Author: kavin kumar
8 December 2021, 3:32 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மூதாட்டியிடம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி உதவி பெற லஞ்சம் பெற்றதாக ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கான்சாபுரம் மங்கம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியம்மாள் என்ற மூதாட்டி.இவர் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூதாட்டிக்கு பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி வந்திருப்பதாகவும், அதனைப் பெற 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என ஊராட்சி செயலர் அய்யனார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு மூதாட்டி தகவல் கொடுத்துள்ளார்.

முதலில் பத்தாயிரம் ரூபாய் முன்பணமாக கொடுப்பதாக மூதாட்டி கூறியது போல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை மூதாட்டியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். பணத்தை செயல் அலுவலர் பெறும்போது அவரை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் அவரை கைது செய்து அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை என்பது நடைபெற்று வருகிறது. கடந்த 6 மாத திமுக ஆட்சியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது தலை விரித்து ஆடுகிறது என பொதுமக்களிடையே பேசப்பட்டும் அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 303

0

0