காதல் திருமணம் செய்த மகள்… கணவன் கண்முன்னே பெண்ணை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்ற பெற்றோர் ; அதிர்ச்சி சிசிடிவி வீடியோ!!
Author: Babu Lakshmanan27 January 2023, 4:47 pm
காதல் திருமணம் செய்த மகளை, கணவன் கண்முன்னே பெற்றோர் தூக்கிச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசியைச் சேர்ந்த கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் என்பவரின் வினித். இவரும், அதே பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வரும் நவீன் படேல் என்பவரது மகளை பள்ளியில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.
அண்மையில், வினித் மற்றும் குரூத்திகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, வினித்தின் பெற்றோர் ஆசியுடன் திருமனம் செய்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் தந்தை நவீன் படேல், மகள் கடத்தப்பட்டதாக போலீஸில் புகார் அளித்தார்.
இருவரும் திருமண வயதை அடைந்தவர்கள் என்பதால், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதையடுத்து, இருவரும் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து கொண்டனர்.
கடந்த 25ம் தேதி கொட்டாக்குளத்தில் இருந்து குத்துக்கல்வலசைக்கு சென்ற புதுமண தம்பதியினர், புத்தாடைகள் வாங்க ஜவுளி கடைக்கு புறப்பட்டனர். இதனை நோட்டமிட்ட குரூத்திகாவின் குடும்பத்தினர், வினித்திடம் இருந்து அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றனர்.
இதில், கடுமையாக தாக்கப்பட்டு, காதல் மனைவியை அவரது குடும்பத்தினர் தூக்கிச் சென்றதால், வினித் விரக்தியடைந்தார். பின்னர், இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0