கமல் மீண்டும் கோவையில் போட்டியிடுவது உறுதி…? வைரலாகும் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளின் போஸ்டர்…!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 4:25 pm

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து மக்கள் நீதி மய்யம் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. ஆனால், தேர்தலில் கமல்ஹாசன் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவாரா…?, இல்லை, உதய சூரியன் அல்லது காங்கிரஸின் கை சின்னத்தில் போட்டியிடுவாரா..? என்பது தான் இன்னும் தெரியாமல் இருந்து வருகிறது.

அதேவேளையில், திமுகவுடன் நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், கோவை மற்றும் தென்சென்னை தொகுதியை அவர் கேட்டதாக தெரிகிறது. இதனால், கமல் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று கேள்வி எழுந்து வந்தது.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த கமல், இன்னும் ஓரிரு தினங்களில் நல்ல செய்தியுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், கமல் மீண்டும் கோவையில் போட்டியிடுவது உறுதி செய்வதைப் போல, கோவை மாநகரின் முக்கிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஏழாம் ஆண்டு துவக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு அக்கட்சி சார்பில் கோவையில் ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் “தமிழக மக்களின் அடிமட்ட சாமான்யனின் குரலாய் பாராளுமன்றத்தில் ஒலிக்க… நம்மவரின் கரத்தை வலுப்படுத்துவோம்! என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7ம் ஆண்டு துவக்க என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒட்டிய இந்த போஸ்டர்கள் அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?