அசுர வேகத்தில் சென்ற தனியார் பேருந்து… லேசாக உரசியதில் தூக்கி வீசப்பட்ட பைக்… இளைஞர் பரிதாப பலி

Author: Babu Lakshmanan
20 February 2024, 5:18 pm
Quick Share

புதுக்கோட்டை அருகே அதிவேகத்தில் சென்ற தனியார் பயணிகள் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சி.சி.டிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள முக்கூட்டுகொள்ளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கவாசகம். 33 வயதுடைய இவர் திருவரங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பயணிகளை ஏற்றுவதற்காக அதிவேகத்தில் ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு நோக்கி சென்ற தனியார் பயணிகள் பேருந்து, பயங்கர வேகத்துடன் திடீரென பேருந்தின் பின்பக்கத்தில் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

அப்பொழுது, பேருந்துக்கும், இருசக்கர வாகனம் ஒரு இன்ச் அளவை இடைவெளி இருந்தது. மேலும், பேருந்து அதிபயங்கர வேகத்தில் சென்றது சிசிடிவி கட்சியில் இடம் பெற்றுள்ளது. பின்னர் அந்த பேருந்து அவ்வழியாக சென்ற மற்ற வாகனங்களையும் அதிவேகத்தில் முந்தி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் மாணிக்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

இந்த நிலையில் தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் அதிவேகத்தில் எடுத்துச் சென்றதால் தோப்பு கொள்ளை என்ற இடத்தில் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பேருந்து தினமும் இதுபோன்று அதிவேகத்தில் செல்வதாகவும், யார் எதிரே வருகிறார்கள் யார் நமக்கு முன்னே செல்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், பயங்கர ஹாரன் சத்தத்துடன் நெஞ்சை குலை நடுங்கும் அளவிற்கு சத்தத்தை எழுப்பிக் கொண்டு செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுக்கின்றனர்.

இது குறித்து பொதுக்கூட்ட அதிகாரியிடம் பலமுறை கூறியும், அவர்கள் ஏனோ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இனிமேலாவது இதுபோன்ற சாலை விபத்து ஏற்படா வண்ணம் அரசு அதிகாரிகள், போக்குவரத்துக் காவலர்களை கொண்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட செய்ய வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 579

    0

    0