ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்த சம்பவம் : துரிதமாக காப்பாற்றிய காவலர்!!!

1 March 2021, 11:32 am
cbe Train Slip -Updatenews360
Quick Share

கோவை : ஒடும் இரயில் ஏற முயன்ற பயணி இழுத்துச்செல்லப்பட்ட போது துரிதமாக செயல்பட்டு பயணியை பாதுகாப்பாக மீட்ட இரயில்வே போலிசாருக்கு பாராட்டுகள் குவிகிறது.

கோவை இரயில் நிலையத்தில் ஒடும் ரயிலில் ஏற முயற்சித்த பயணி தவறி கீழ விழுந்தார். . இரயில் நிலையத்திற்கு மாலை 4.30 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் வரைக்கும் செல்லும் வண்டி 3வது நடைபாதையில் வந்துள்ளது.

ஒடும் இரயில் பயணி ஏற முயற்சித்த போது கால்தடுமாறி கீழே விழுந்தார், அப்போது வண்டியின் கம்பியை பிடித்துக்கொண்டே சிறிது தூரம் இழுத்து செல்கையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் சிரிஜித்( RPF) துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றினார்.

மேலும் இச்சம்பவம் குறித்து இரயில்வே உயர் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலரை வெகுவாக பாராட்டினார். இது குறித்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 10

0

0